Tuesday, 16 August 2016

பணம் பாதாளம் வரை பாயும் என்பதற்கு நம் கண் முன்னே ஓர் சான்று!

நான் பலமுறை யோசித்ததுண்டு, இந்த நூற்றாண்டில் வாழும்  சாமியார்கள் ஏன் கோடி கோடியாக சொத்துக்கள் குவித்துள்ளனர் என்று காரணம் தேடி ,காலங்கள் கடந்து விட்ட நிலையில் சட்டென்று உண்மை புரிந்தது.
    இவ்வளவு பணத்தை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் கை தனியே கால் தனியே என்று ஒவ்வொரு சொகுசு கார்களிலும் தனித்தனியே பயணிக்க முடியாது .மேலும் பத்து வகை உணவையும் ஒரே சமயத்தில் வாயில் திணிக்க முடியாது .அவனுக்கு எத்தனை மாளிகைகள் இருந்தாலும் ஒரே வீட்டில்தான் இருக்கமுடியும் ,அதுவும் கூட ஒரு அறையில் தான், ஒரு சமயத்தில் வசிக்க முடியும்.. காற்றைப்போல் தன் அறையைக் கூட அவனால் நிரப்ப முடியாது .
     பிறகு ,அவ்வளவு கோடி பணம் எதற்காக? உண்ணவா? உடுக்கவா ? பிறரைக் கெடுக்கவா ? பிறரைக் கெடுக்கத்தான் என்று சொன்னாலும் ஓரளவுத்தான் பொருந்தும். ஏன் எனில் எவ்வளவு பேரின் குடியைத்தான்,தன் வாழ் நாளில் ஒரு மனிதன் அழிக்கமுடியும் ? சொல்லுங்களேன் .
     ஆனால் நான் புரிந்த உண்மை யாதெனில் , கண்டிப்பாக இந்த வாழும்  சாமியார்கள் பணம் சேர்க்க (சம்பாதிப்பதல்ல) சில “கோல்மால்” சில “தகிடுதித்தம்” போன்ற வேலைகளை செய்தாக வேண்டும் .அதனால் என்றோ வரக் கூடிய பிரச்சினையிலிருந்து தப்பிக்க இந்த பணம் உதவுகிறது. என்று சொன்னால் மிகையாகாது.
    தனக்கு பிற்காலத்தில் வைக்கப்படும் “ஆப்புகளை” அகற்றவும் அப்பணம் ஆதரவளிக்கிறது .எவ்வளவு சர்ச்சையில் சிக்கி ,பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டாலும் வந்த வேகத்திலேயே அத்தனையும் மாயமாகிவிடுகிறது .இதிலிருந்தே தெரியவில்லையா, பணம் பாதாளம் வரை பாயுமென்று .ஆகையால் கெட்டவர்களுக்கு நல்லவர்களால் வைக்கப்படும் “ஆப்பை” அசைக்க  ஒரு குரங்கு தேவை ,அதுவே பணம்.
ஆகவே இதுதான் பணத்தை சேமிப்பதன் நோக்கம் என்பது புலனாகிறது. எனவே காரணம் புரிந்த நிம்மதியுடன் துயிலச் சென்றேன்.

.

0 comments:

Post a Comment

Privacy Policy

This blog does not share personal information with third parties nor do we store any information about your visit to this blog other than to analyze and optimize your content and reading experience through the use of cookies.

You can turn off the use of cookies at anytime by changing your specific browser settings.

I am not responsible for republished content from this blog on other blogs or websites without my permission.

This privacy policy is subject to change without notice and was last updated on September, 11, 2016. If you have any questions feel free to contact me directly here: dhandapani1096@gmail.com.